Thursday, 17 January 2013



Dear Mr.Rahulji…


அன்பிற்குரிய ராகுல்ஜி அவர்களுக்கு,

ராகுல் தலைமையிலான அரசு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திப்போம் என காங்கிரஸ் தலைமை அறிவித்ததும் என் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. காரணம் இந்த தாயகத்தை சரியான வழியில் நடத்திச்செல்ல வேறு எவரும் இல்லை என்பது என் கருத்து. பி.ஜே.பி.க்கு ஒரு குறிப்பிட்ட மதத்தை சாதியை வைத்தே இந்தியாவை வழி நடத்த பார்க்கிறது. இது சரியான பாதையாக தெரியவில்லை. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நாட்டில் அமைதியையும், ஆனந்தத்தையும் மட்டுமே நிலைத்து இருக்கும்படி இருக்க வேண்டும். இது பி.ஜே.பி.க்கு புரியவில்லை.

ராகுல்ஜி, உங்களது பாதையை நான் அறிவேன். உங்களோடு இரண்டு நாள் தில்லியில் கழித்திருக்கிறேன். உங்களது எண்ணங்களை அங்கு நீங்கள் பிரதிபலித்திருக்கிறீர்கள். உயர்வான உங்களது எண்ணத்தை கண்டு அங்கு வியந்திருக்கிறேன்.

இந்த நாட்டை உங்களிடம் ஒப்படைப்பதில் நான் பெருமை கொள்வேன். ஏனெனில் அடிதட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம், முயற்சி வேறு எந்த தலைவரும் இது வரை இருந்ததில்லை. அரசியல் நாடகம் நடத்த மட்டுமே பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியும். நீங்கள் எதார்த்தத்தை மட்டுமே செய்பவர். அது நாடகர்களுக்கு நீங்கள் செய்வது ஒரு நாடகமாகவே தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலை படுவதில்லை என்பதும் மக்களுக்கு தெரியும்.

உங்களது பாதையில் இருந்து விலகாமல் செல்லுங்கள். உங்களோடு நாங்கள் வருகிறோம். இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்வோம்.

ராகுல் தலைமை ஏற்போம்!
நாட்டின் பளுவை குறைப்போம்!

No comments:

Post a Comment