Thursday 17 January 2013



Dear Mr.Rahulji…


அன்பிற்குரிய ராகுல்ஜி அவர்களுக்கு,

ராகுல் தலைமையிலான அரசு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திப்போம் என காங்கிரஸ் தலைமை அறிவித்ததும் என் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. காரணம் இந்த தாயகத்தை சரியான வழியில் நடத்திச்செல்ல வேறு எவரும் இல்லை என்பது என் கருத்து. பி.ஜே.பி.க்கு ஒரு குறிப்பிட்ட மதத்தை சாதியை வைத்தே இந்தியாவை வழி நடத்த பார்க்கிறது. இது சரியான பாதையாக தெரியவில்லை. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நாட்டில் அமைதியையும், ஆனந்தத்தையும் மட்டுமே நிலைத்து இருக்கும்படி இருக்க வேண்டும். இது பி.ஜே.பி.க்கு புரியவில்லை.

ராகுல்ஜி, உங்களது பாதையை நான் அறிவேன். உங்களோடு இரண்டு நாள் தில்லியில் கழித்திருக்கிறேன். உங்களது எண்ணங்களை அங்கு நீங்கள் பிரதிபலித்திருக்கிறீர்கள். உயர்வான உங்களது எண்ணத்தை கண்டு அங்கு வியந்திருக்கிறேன்.

இந்த நாட்டை உங்களிடம் ஒப்படைப்பதில் நான் பெருமை கொள்வேன். ஏனெனில் அடிதட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம், முயற்சி வேறு எந்த தலைவரும் இது வரை இருந்ததில்லை. அரசியல் நாடகம் நடத்த மட்டுமே பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியும். நீங்கள் எதார்த்தத்தை மட்டுமே செய்பவர். அது நாடகர்களுக்கு நீங்கள் செய்வது ஒரு நாடகமாகவே தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலை படுவதில்லை என்பதும் மக்களுக்கு தெரியும்.

உங்களது பாதையில் இருந்து விலகாமல் செல்லுங்கள். உங்களோடு நாங்கள் வருகிறோம். இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்வோம்.

ராகுல் தலைமை ஏற்போம்!
நாட்டின் பளுவை குறைப்போம்!

Tuesday 18 December 2012

Denkanikottai Beautiful Betrayaswamy Temple


19.12.2012
அன்பானவர்களுக்கு வணக்கம்!

எனது நண்பவர் ஒருவரை பார்க்க தேன்கனிக்கோட்டைக்கு (கிருஷ்ணகிரி மாவட்டம்) சென்றிருந்தேன். பாதையெங்கும் மிகவும் ரம்மியமான காட்சிகள். தேன்கனிக்கோட்டையின் வாசலில் மிகவும் அழகான ஒரு கோவில் கண்ணுக்கு குளிர்ச்சியளித்தது. நான் மட்டும் ரசித்து என்ன செய்ய! நீங்களும் அக்கோவிலின் அழகை காணுங்களேன்.







சதீஸ்குமாரின் டாடா விஸ்டா வி.எக்ஸ்.



19.12.2012
அன்பானவர்களுக்கு வணக்கம்!

நினைத்ததை முடிக்கவேண்டும் இவனுக்கு. அடம்பிடித்து வாங்கிய புதிய டாடா விஸ்டா வி.எக்ஸ். கார்க்கு இந்த அன்பு அண்ணனின் முதல் வாழ்த்துக்கள்.
 
பல முறை உனக்கு ஆலோசனை வழங்கி இருந்தாலும் எழுத்து பூர்வமாக கூறுவதில் அவ்வப்போது நீவீர் படிக்கும்போது பயனுள்ளதாக இருக்கும். நான் ஆசைப்பட்டுவிட்டேன் அண்ணா, என்று நீ கூறும் வார்த்தையே தவறு தான். ஏனென்றால் ஆசையை கட்டுபடுத்துவது தான் இந்த மனித குலத்தில் மிகப் பெரிய கஷ்டம். புத்தர் முதல் ஆன்மீகம் வரை ஆசையை கட்டுபடுத்து பற்றி தான் விளக்குகிறது. உன் தந்தையார் அவரது பருவ காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தார் என்பது உமக்கு தெரியும், ஆனால் உனக்கு புரியவில்லை, உன்னால் அவற்றை உணர முடியவில்லை. உன் பெற்றோர் உன்னை சிறிதும் கூட கஷ்டப்படாமல் வளர்த்ததே உன்னுடைய இந்த அலட்சியத்திற்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்த பணக்காரர் மகன் இருக்கிறார். அவர்களது செல்வத்திற்கு அளவே இல்லை. தன் மகனுக்கென அவரது தந்தை சிறு வயதிலேயே கார் வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனால் இன்று வரை எனது நண்பர் அவரது பெற்றோரின் பேச்சை மீறியதே இல்லை. மிகவும் பொருப்பான மகன் அவர். உனக்கு மட்டும் ஏன் பேச்சை மீறும் செயல்!

உன் நிலைமையை உணர்ந்துக்கொள். உனக்கு உன் தந்தையார் நிலையான ஒரு தொழிலை ஏற்படுத்தி தந்திருக்கிறார். அவற்றை உதாசீனப்படுத்தாமல் முறையாக அத்தொழில் சாலையின் மேல் அதிக கவனத்தை செலுத்தி அவற்றின் வளர்ச்சிக்கு பாடுபடு! உனக்கு செல்வம் தானாக வந்து சேரும். பெற்றோரின் அன்பைப் பெறு, சாதித்துக்கொள்!  

Sunday 16 December 2012

ஸ்ரீ பைரவர் வழிபாடு – துன்பங்களை விரட்டியடிக்கும்



17.12.2012
அன்பானவர்களுக்கு வணக்கம்,

ஸ்ரீ பைரவர் வழிபாடு – துன்பங்களை விரட்டியடிக்கும்

மேற்கூறியது போல் எனது மனைவி கூறியதன் பேரில் தருமபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவர் கோவிக்கு குடுமத்துடன் சென்றேன். அதிசயம் அங்கு காத்திருந்தது. ஏனென்றால் பல முறை அந்தப்பக்கம் நான் சென்றிருக்கிறேன். இப்படி ஒரு கூட்டத்தை அங்கு நான் இது வரை பார்த்ததில்லை. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கால பைரவர் கோவிலை 18 முறை சுற்றி வந்தார்கள். நானும் அங்கு சென்று பூஜை தட்டு ரூ.40 கொடுத்து வாங்கி கடவுளின் முன்பு நெய் தீபம் ஏற்றி 18 முறை கோவிலை சுற்றி வந்தேன். மனது கொஞ்சம் லேசானதாக பட்டது.

ஸ்ரீ கால பைரவர்ரை சந்திக்க பெரிய கியூ வரிசை காத்திருந்தது. அமைதியாக கியூவில் நின்றிருந்த போது எனது மனைவி இதற்கு முன் நான் வந்திருந்தபோது, எனக்கு மாலையில் தலைவலி வருவது தங்களுக்கு தெரியும் அவை இனிமேல் வரக்கூடாது என கடவுளிடம் வேண்டினேன். என்ன ஆச்சர்யம் என்னவென்றால் அன்றிலிருந்து இன்று வரை எனக்கு தலைவலி வரவில்லை என்று கூறியதும் ஸ்ரீ கால பைரவர்ரின் சக்தியை உணர்ந்தேன். ஆம் அங்கிருந்த அவ்வளவு கூட்டமும் ஏதோ அவர்கள் நினைத்தது நிறைவேறியதால் தான் அக்கோவிலுக்கு குடும்பத்துடன் அனைவரும் வந்திருப்பதை நான் உணர்ந்தேன்.


“பைரவர் வழிபாடு கைமேற் பலன்
இது தமிழகத்தில் வழங்கி வரும் பைரவர் வழிபாடு குறித்த ஆன்மீக பழமொழியாகும். ஒரு மனிதனுக்கு துன்பங்கள், துயரங்கள் எப்பவாவது வந்து செல்லலாம். ஆனால் எப்பவுமே தும்பம், துயரம் என்றிருந்தால் என்ன செய்வது? அதற்கு ரெமிடி ஸ்ரீ கால பைரவர் வழிபாடு மட்டுமே.


ஸ்ரீ கால பைரவர் – ஓர் அறிமுகம்

பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்று பொருள். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்ற பெயர் வந்தது.

‘பை என்பது உலகில் உயிர்களை தோற்றுவிக்கும் படைப்புத் தொழிலையும், ‘ர என்பது தோன்றிய உயிர்களைக் காப்பதையும், ‘வ என்பது வாழ்ந்து முதிர்ந்த உயிர்களைத் தன்னுள் ஒடுக்கிக்கொள்வதையும் குறிக்கின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

அன்பானவர்களுக்கு உங்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தால் (அல்லது இல்லாவிட்டாலும்) இக்கோவிலுக்கு உங்களது கோரிக்கையை ஒரு முறை வைத்து பாருங்கள் உங்கள் எண்ணம் நிறைவேறும் துன்பம் உடனடியாக விட்டு விலகும் என்பது ஐயமில்லை.
---------------------------------------------



Wednesday 12 December 2012

அன்பானவர்களுக்கு! வணக்கம்!

இன்றைய நல்ல நாளில் (12.12.12) இந்த வலைப்பதிவை துவக்குவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். சமுதாயத்தில் பல்வேறு விதமான நிகழ்வுகள், சம்பவங்கள் அத்ற்கேற்ற கருத்துக்கள உள்ளன. என மனதில் ஏற்படும் கருத்துக்களை உலகிற்கு பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பதிவை நான் துவக்குகிறேன்.
அதற்கேற்றார் போல் உங்களின் பதிலுரைகளை நான் அன்போடு வரவேற்கிறேன்.

அன்புடன்,
கணேஷ்