17.12.2012
ஸ்ரீ பைரவர் வழிபாடு –
துன்பங்களை விரட்டியடிக்கும்
மேற்கூறியது போல் எனது மனைவி கூறியதன் பேரில்
தருமபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவர் கோவிக்கு குடுமத்துடன் சென்றேன். அதிசயம் அங்கு காத்திருந்தது.
ஏனென்றால் பல முறை அந்தப்பக்கம் நான் சென்றிருக்கிறேன். இப்படி ஒரு கூட்டத்தை
அங்கு நான் இது வரை பார்த்ததில்லை. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கால பைரவர் கோவிலை
18 முறை சுற்றி வந்தார்கள். நானும் அங்கு சென்று பூஜை தட்டு ரூ.40 கொடுத்து வாங்கி
கடவுளின் முன்பு நெய் தீபம் ஏற்றி 18 முறை கோவிலை சுற்றி வந்தேன். மனது கொஞ்சம்
லேசானதாக பட்டது.
ஸ்ரீ கால பைரவர்ரை சந்திக்க
பெரிய கியூ வரிசை காத்திருந்தது. அமைதியாக கியூவில் நின்றிருந்த போது எனது மனைவி
இதற்கு முன் நான் வந்திருந்தபோது, எனக்கு மாலையில் தலைவலி வருவது தங்களுக்கு
தெரியும் அவை இனிமேல் வரக்கூடாது என கடவுளிடம் வேண்டினேன். என்ன ஆச்சர்யம்
என்னவென்றால் அன்றிலிருந்து இன்று வரை எனக்கு தலைவலி வரவில்லை என்று கூறியதும் ஸ்ரீ கால பைரவர்ரின் சக்தியை உணர்ந்தேன். ஆம் அங்கிருந்த அவ்வளவு கூட்டமும் ஏதோ
அவர்கள் நினைத்தது நிறைவேறியதால் தான் அக்கோவிலுக்கு குடும்பத்துடன் அனைவரும்
வந்திருப்பதை நான் உணர்ந்தேன்.
“பைரவர் வழிபாடு கைமேற் பலன்”
இது தமிழகத்தில் வழங்கி வரும் பைரவர் வழிபாடு
குறித்த ஆன்மீக பழமொழியாகும். ஒரு மனிதனுக்கு துன்பங்கள், துயரங்கள் எப்பவாவது
வந்து செல்லலாம். ஆனால் எப்பவுமே தும்பம், துயரம் என்றிருந்தால் என்ன செய்வது?
அதற்கு ரெமிடி ஸ்ரீ கால பைரவர் வழிபாடு மட்டுமே.
ஸ்ரீ கால பைரவர் – ஓர் அறிமுகம்
பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு
மிகவும் பயங்கரமானவர் என்று பொருள். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை
அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்ற பெயர் வந்தது.
‘பை’ என்பது உலகில் உயிர்களை தோற்றுவிக்கும் படைப்புத்
தொழிலையும், ‘ர’ என்பது தோன்றிய உயிர்களைக் காப்பதையும், ‘வ’ என்பது வாழ்ந்து முதிர்ந்த உயிர்களைத் தன்னுள்
ஒடுக்கிக்கொள்வதையும் குறிக்கின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய
முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
அன்பானவர்களுக்கு உங்களுக்கும் கடவுள் நம்பிக்கை
இருந்தால் (அல்லது இல்லாவிட்டாலும்) இக்கோவிலுக்கு உங்களது கோரிக்கையை ஒரு முறை
வைத்து பாருங்கள் உங்கள் எண்ணம் நிறைவேறும் துன்பம் உடனடியாக விட்டு விலகும் என்பது
ஐயமில்லை.
---------------------------------------------
No comments:
Post a Comment