19.12.2012
அன்பானவர்களுக்கு வணக்கம்!
நினைத்ததை முடிக்கவேண்டும் இவனுக்கு. அடம்பிடித்து வாங்கிய
புதிய டாடா விஸ்டா வி.எக்ஸ். கார்க்கு இந்த அன்பு அண்ணனின் முதல் வாழ்த்துக்கள்.
பல முறை உனக்கு ஆலோசனை வழங்கி இருந்தாலும் எழுத்து பூர்வமாக
கூறுவதில் அவ்வப்போது நீவீர் படிக்கும்போது பயனுள்ளதாக இருக்கும். நான் ஆசைப்பட்டுவிட்டேன் அண்ணா, என்று நீ கூறும் வார்த்தையே
தவறு தான். ஏனென்றால் ஆசையை கட்டுபடுத்துவது தான் இந்த மனித குலத்தில் மிகப் பெரிய
கஷ்டம். புத்தர் முதல் ஆன்மீகம் வரை ஆசையை கட்டுபடுத்து பற்றி தான் விளக்குகிறது.
உன் தந்தையார் அவரது பருவ காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தார் என்பது உமக்கு
தெரியும், ஆனால் உனக்கு புரியவில்லை, உன்னால் அவற்றை உணர முடியவில்லை. உன் பெற்றோர்
உன்னை சிறிதும் கூட கஷ்டப்படாமல் வளர்த்ததே உன்னுடைய இந்த அலட்சியத்திற்கு காரணமாக
இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எனக்கு தெரிந்த பணக்காரர் மகன் இருக்கிறார். அவர்களது
செல்வத்திற்கு அளவே இல்லை. தன் மகனுக்கென அவரது தந்தை சிறு வயதிலேயே கார் வாங்கிக்
கொடுத்திருந்தார். ஆனால் இன்று வரை எனது நண்பர் அவரது பெற்றோரின் பேச்சை மீறியதே
இல்லை. மிகவும் பொருப்பான மகன் அவர். உனக்கு மட்டும் ஏன் பேச்சை மீறும் செயல்!
உன் நிலைமையை உணர்ந்துக்கொள். உனக்கு உன் தந்தையார் நிலையான
ஒரு தொழிலை ஏற்படுத்தி தந்திருக்கிறார். அவற்றை உதாசீனப்படுத்தாமல் முறையாக அத்தொழில்
சாலையின் மேல் அதிக கவனத்தை செலுத்தி அவற்றின் வளர்ச்சிக்கு பாடுபடு! உனக்கு
செல்வம் தானாக வந்து சேரும். பெற்றோரின் அன்பைப் பெறு, சாதித்துக்கொள்!
No comments:
Post a Comment